Tuesday, June 30, 2009

மாப்பிள்ளை பிடிக்கவில்லை’ என்று கூறிய மணப்பெண்ணால் திருமணம் நின்றது




முகூர்த்த நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று மணமகள் கூறியதால் திருமணம் நின்றது. அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் வேறு வழியின்றி திரும்பி சென்றனர்.

சென்னை கே.கே.நகரை சேர்ந்த எம்காம் பட்டதாரி பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மயிலாப்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை திருமண வரவேற்பு நடந்தது.

மாலை 6 மணிக்கு மணமகன் மட்டும் மேடையில் இருந்தார். மணமகள், அலங்காரத்துக்கு சென்றவர் இரவு 7 மணிக்குதான் திரும்பியுள்ளார்.
பின்னர் மேடைக்கு வரும்போது திடீரென்று மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் மணமகள் அறைக்கு அவரை அழைத்து சென்றனர். மணமகன் மட்டும் மேடையில் அமர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன்பின் இரவு 11 மணிக்கு, "எனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை" என்று மணமகள் கூறியுள்ளார். இதனால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

உறவினர்களும் நண்பர்களும் மணமகளிடம் அதிகாலை 4 மணி வரை பேசி பார்த்தனர். ஆனால், திருமணத்துக்கு கடைசி வரை அவர் சம்மதிக்கவே இல்லை. அவருக்கு ஆதரவாக அம்மாவும் இருந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மணமகன் வீட்டார், அதிகாலை 4 மணிக்கு திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.

மண்டபத்தில் அலங்கார வேலைப்பாடுகள், சாப்பாடு எல்லாம் தயாராக இருந்தன. தோரணங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. மேடையில் மணமகளின் பெயரை மட்டும் கிழித்துவிட்டு "தவிர்க்க முடியாத காரணத்தால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது" என்று எழுதி வைத்து விட்டு மணமகன் வீட்டார் சென்றனர்.

மணமேடை வரை வந்து, மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சாதாரண ஒரு காரணத்தை சொல்லி திருமணத்தை நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று மணமகன் வீட்டார் வேதனையுடன் கூறிவிட்டு சென்றனர். அவர்கள் போலீசில்கூட புகார் தெரிவிக்கவில்லை.

Tuesday, June 23, 2009

ஒரு தாயிடமிருந்து


அன்புள்ள மகனுக்கு
கலங்கிப்போன உன்
மனதுக்கு ஆறுதலாய்
அம்மாவின் அன்பு மடல்

குழந்தைகள் நடை
பயிலும்போது பல தடவைகள்
தடுக்கும் அதுபோலத்தான்
சாதிக்க துடிக்கும் போது
சறுக்கல்களை சந்திக்க
நேரிடும்

நீ கருவில் இருக்கும்
போது தவறியும் உன் கால்கள்
பட்டதில்லை இந்த தாயின்
வயிற்றில் அப்போது பயந்தேன்
ஆனால் கருவறையிலேயே
நீ கற்றுக்கொண்ட பாடம் அது
பெண்ணுக்கு பிரசவம்
மறு ஜென்மமாம் அந்த
பாக்கியம் எனக்கும்
கிடைத்தது உன்னால்

தாயென்ற அந்தஸ்து தந்த
தலைமகனே நிச்சயமாய்
எனக்கு தெரியும் நீ
சாதிக்கப் பிறந்தவன்

சோதனைகளை உன்
சாதனைகளின்
படிக்கட்டுகளாக்கு
உலகம் உன்னை நிமிர்ந்து
பார்க்கும்.
***

Monday, June 22, 2009

யாருக்காக..?


என் கவிதைகளின் கருவானவளே
இதோ என் இதயம் கிழிந்து
உதிரம் கசிகிறது

நீ விதைத்த காதல் விதை
வளர்ந்து விருட்சமாகி கொண்டிருக்கும்
போது அங்கம் அங்கமாக
அறுத்தெடுக்கிறாயே

உன் புதிய உறவின் புண்ணிறத்தால்
ஒவ்வொரு இரவும்
என் கண்ணீரால் ஈரமாவது
உனக்கெங்கே புரியப்போகிறது

நிரந்தரமாய் உறங்க நினைக்கிறேன்
காலனும் என்னைக்
கை விட்டு விட்டான்
காடு கூட எனை
வெறுக்கிறது போலும்

என் கவிதைக்கு முற்றுப்புள்ளி
வைத்து விட்டு இன்னொரு
கவிக்கு தலைப்பிட
சென்று விட்டாயா?


Thursday, June 18, 2009

இரவு மழை

நிலவு அழுகிறது தன்னை
விட உன்னை அழகாக படைத்து
பிரம்மன் தனக்கு வஞ்சனை
செய்துவிட்டான் என்று

*

நீ

இருவர் சேர்ந்து
இரவில் எழுதிய
கறுப்புக்கவிதை!

*

Wednesday, June 17, 2009

700 years old houses in Iran!

Very impressive. They also have electricity!
















பல நூற்றாண்டு காலம் மறைந்திருந்த அரிய அரை நிர்வாண மோனாலிஸா ஓவியம் - இத்தாலியில் கண்டுபிடிப்பு



உலகப் பிரபல ஓவியர் லியனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மேலாடையற்ற மோனாலிஸா ஓவியமானது பல நூறு வருடங்களுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை எவரது பார்வையிலும் சிக்காது மறைவாக இருந்த இந்த அரிய ஓவியம், இத்தாலியிலுள்ள லியனார்டோ டாவின்சியின் பிறப்பிடமான வின்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழமையான மோனாலிஸாவின் ஓவியத்தையொத்த புன்னகை மற்றும் பின்னணிக் காட்சிகளுடன் காணப்படும் இந்த ஓவியம், நெப்போலியனின் மாமனார் கருதினால் ஜோசப் பெஸ்ச்சின் உடைமையாக இருந்து அவரது வாசிகசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

1503 ஆம் ஆண்டு லியனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மேற்படி ஓவியம், அசல் மோனாலிஸா ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட 6 நிர்வாண மோனாலிஸா ஓவியங்களில் ஒன்றென வின்சி அருங் காட்சியகத்தின் தலைவர் அலெக்ஸாண்ட்ரோ வெஸ்ஸோய் தெரிவித்தார்.

1479 ஆம் ஆண்டு பிறந்த லிஸா டெல் கியோகொன்டோ என்ற பெண்மணியின் உருவப்படமே இந்த மோனாலிஸா ஓவியம் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



Friday, June 12, 2009

குழந்தைத் தொழிலாளிகள்














இவற்றை விமர்சிக்க என் தமிழில் வார்த்தைகள் இல்லை .













ரொட்டி பிரியர்களின் கவனத்திற்கு




இந்தியக்கொடியை எரிக்க முயன்றவர்களுக்கு நாள்தோறும் வீட்டின் முன்பு கொடியேற்றுமாறு தண்டனை


இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தி இந்தியக்கொடியை எரிக்கமுயன்றவர்கள் நாள்தோறும் தங்கள் வீட்டின் முன்பு கொடியேற்ற வேண்டுமென்று நீதிபதி தண்டனையளித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தி தமிழர் தேசிய பொதுவுடைமை கட்சி, தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்தியா மற்றும் இலங்கையின் தேசிய கொடிகளை தீ வைத்து எரிக்க முயன்றனர். இது தொடர்பாக தமிழரசன் உள்பட 8 பேரை கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். எனவே, தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி இவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்து இருந்தனர். இந்த மனு விடுமுறை கால நீதிபதி கர்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போது, தேசிய கொடியை மதிக்கிறேன். அக்கொடியை பெரிதும் நேசிக்கிறேன் என கடிதம் எழுதி தரும்படி அவர்களிடம் நீதிபதி கேட்டார். ஆனால் அவர்கள் தர வில்லை. இந்த நிலையில் இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர், கொடியை எரிக்க முயன்றவர்கள் ஒரு மாதத்துக்கு தினமும் தங்கள் வீட்டின் முன்பு தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தர விட்டார்.

எப்போதோ படித்தது


டேய் மறந்துடாதே... பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை 'ரிஸீவ்' பண்ணவர்ற ஆள்கிட்ட 'அடையாளம்' சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.அதனால வழக்கம் போல் தண்ணியை போட்டுட்டு'கிழே படுத்துக்க' ஆமா!!!

ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க பஸ்ல காசுக் கொடுக்கலன்னா பஸ் ஓட்டச்சொல்வாங்களா?

காதல் ஒரு மழை மாதிரி,நனையும் போது சந்தோஷம். நனைந்த பின்பு ஜலதோஷம்.
வாழை மரம் 'தார்' போடும் ஆனால் அதை வச்சு நம்மால'ரோடு' போட முடியாதே!

என்னதான் கராத்தேல பிளாக்பெல்ட்டுனாலும்தெருநாய் தொரத்தினா ஓடத்தான் செய்யணும்.

மரனம் என்பது ஒரு நொடியில் உயிர் போகும்ஆனால் பிரிவு என்பது ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்.

Tuesday, June 9, 2009

ஆஞ்சனேயரை ஸ்மரிப்பவர்களுக்கு



ஜகத்குரு ஸ்ரீ காஞ்சிப் பெரியாவாள் அருள் வாக்கு.




புத்திர் பலம் யசோர் தைர்யம் நிர்பயத்வம் ஆரோகதாஅஜாட்யம் வாக்படுத்வம் ஹனுமத் ஸ்மரணாத் பவேத்.




ஆஞ்சனேயரை ஸ்மரிப்பவர்களுக்கு அவர் என்னென்ன அனுக்கிரஹிக்கிறார் என்று இந்தஸ்லோகம் சொல்கிறது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக் வன்மை, இத்தனையும் தருகிறார் அவர். சாதாரணமாக இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லாமல் இருப்பான்.பெரியபலசாலி புத்தியில்லாமல் இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக இருப்பான். பயந்தாங்கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும் அவற்றைப் பிரயோகிக்கசுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும்தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான். இந்த மாதிரிஏறு மாறான குணங்கள் இல்லாமல், எல்லா ஸ்ரேயஸ்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார்ஆஞ்ச நேயர். காரணம், சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத பல குணங்கள்,சக்திகள், அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருந்தன். நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவைகூட அவரிடம் ஸ்வபாவமாகச் சேர்ந்திருந்தன. உதாரணமாகப் பெரிய புத்திசாலிக்கு அகங்காரம்இல்லாத பக்தி இராது. ஆஞ்ச நேயரோ தேக பலம், புத்தி பலம், இவற்றைப்போலவே வினயம்,பக்தி, இவற்றிலும் முதல்வராக நிற்கிறார். வலிவு இருக்கிறவன் கெட்ட வழியில் போவதுண்டு.அவனுக்கு பக்தி இருக்காது. பக்தி இருக்கிறவர்களுக்கு கூட அதன் ஞானத்தின் தெளிவு இலலாமல்மூட பக்தியாகவோ, முரட்டு பக்தியாகவோ இருப்பதுண்டு. ஆஞ்ச நேயர் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியின்பரம பக்தராக இருக்கும்போதே பரம ஞானியாகவும் இருந்தார். எப்படி தக்ஷிணாமூர்த்தி ஸனகாதிமுனிவர்களை முன்னிட்டு உபதேசம் செய்கிறாரோ, அப்படியே ஸ்ரீராமன் ஆஞ்சனேய ஸ்வாமியைமுன்னால் வைத்துக்கொண்டு ஞான உபதேசம் செய்கிறார் என்று "வைதேஹி ஸஹிதம் " ஸ்லோகம்சொல்கிறது. பைசாச பாஷையில் கீதைக்குத் தத்துவமயமான ஒரு பாஷ்யம் இருப்பதாகவும் அதுஆஞ்ச நேயர் செய்தது என்றும் சொல்வார்கள். அப்படிப்பட்ட தத்துவ ஞானி அவர் ஒன்பது வியாகரணமும்தெரிந்த ' நவ வியாகரண வேத்தா ' என்று ராமரே அவரைப் புகழ்கிற அளவுக்குப் பெரிய கல்விமான்.ஞானத்தின் உச்ச நிலை, பலத்தில் உச்ச நிலை, பக்தியில் உச்ச நிலை, வீரத்தில் உச்ச நிலை, கீர்த்தியில்உச்ச நிலை, சேவையில் உச்ச நிலை, வினயத்தில் உச்ச நிலை இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறஸ்வரூபம் ஒன்று உண்டு என்றால் அது ஆஞ்ச நேய ஸ்வாமிகள் தான்.இது எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய பிரம்மசர்யத்தைச் சொல்லவேண்டும். ஒரு க்ஷணம் கூடக் காமம் என்கிற நினைப்பே வராத மஹா பரிசுத்த மூர்த்தி அவர்.அவரை நம் தேசத்தில் அனுமார் என்போம். கன்னடச்சீமையில் அவரே ஹனுமந்தையா. சித்தூருக்குவடக்கே ஆந்திரா முழுவதும் ஆஞ்சனேயலு. மஹாராஷ்டிரம் முழுவதும் மாருதி. அதற்கும் வடக்கில்மஹாவீர் .ஆஞ்ச நேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் நமக்கு தைரியம் வரும், பயம் நிவ்ருத்தி ஆகும். புத்தி வரும். பக்தி வரும். ஞானம் வரும். காமம் நசித்துவிடும்.ராம் ராம் என்று எங்கெங்கே சொல்லிக் கொண்டிருந்தாலும், ரகுனான கீர்த்தனம் எங்கெங்கே நடந்தாலும்அங்கெலாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்ச நேயர் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக்கொண்டு நின்று கேட்கிறார். இந்த காலத்தில் நமக்கு மற்ற எல்லா அனுக்கிரஹங்களோடுமுக்கியமாக அடக்கமாக இருக்கிற பண்பு ரொம்பவும் அவசியப்படுகிறது. அதை நமக்கு ஆஞ்ச நேயர்அனுக்கிரஹம் பண்ணவேண்டும். அவரைப் பிரார்த்திப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை.


Monday, June 8, 2009

எனக்கு பிடித்த பாடல்

அப்பா

ஐம்பதை நெருங்கிய
எங்கள் வீட்டு ஆலமரம்
என் அப்பா...

காற்றுக்கு வளையாத
இரும்பு போல
கஷ்டத்திலும் கலங்காத
நெஞ்சம் .......

பதின்மூன்று வயது
முதல் எங்களுக்காய்
பகல் இரவாய்
உருகிய மெழுகுவரத்தி

பாலூட்டி வளர்த்த
என் அன்னை போல
பாசத்தையும் பண்பையும்
வளர்த்த என் அப்பா

துஷ்டனை கண்டால் தூர விலகு
எனும் போதும் நம் தூய அன்பால்
அவனையும் மனிதனாக்கலாம்
என்று சொல்லித்தந்தவர்

உதிரத்தை உழைப்பாக்கி
எங்களை உயரத்துக்கு
கொண்டு வந்த உத்தமரே

உன் பாதத்தில்
என் கண்ணீரை
மட்டும் கொட்டினால்
போதாது........

என் இறுதி மூச்சிருக்கும்
வரை என்னை
எரித்து உனக்கு
வெளிச்சம் தருவேன்.

Saturday, June 6, 2009

எங்கே அவள்

குற்றவாளிகளை விடுவிக்க லஞ்சம் கேட்ட நீதிபதிகள்

பஞ்சாப் லஞ்ச ஒழிப்பு பொலிசார், நீதிபதிகள் யாராவது லஞ்சம் வாங்குகிறார்களா? என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நீதிபதிகள் யார் யாருடன் டெலிபோனில் பேசுகின்றனர் என்பதை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது பஞ்சாப் ஐகோர்ட்டில் நீதிபதிகள் இருவர் இடைத்தரகர்கள் மூலம் குற்றவாளிகளிடம் பேசி லஞ்சம் கேட்டது தெரியவந்தது.
கற்பழிப்பு வழக்கு
பஞ்சாப்பில் ஒரு பெண்ணை கற்பழித்ததாக ராம்லால் என்பவரும் ஐ எ எஸ் அதிகாரி ஜெயின் என்பவரு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நீதிபதி மேக்தாப்சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் தனது உறவினர் ஒருவர் மூலம் குற்றவாளிகளிடம் பேசினார். அவர்களை விடுவிக்க ரூ . 40 லட்சம் லஞ்சம் கேட்டார்.
அவர்கள் டெலிபோனில் பேசியதை லஞ்ச ஒழிப்பு பொலிசார் பதிவு செய்தனர். இதேபோல மேலும் சில நீதிபதிகளும் லஞ்சம் பேசிய ஆதாரங்கள் கிடைத்தன.
நடவடிக்கை இல்லை
நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் தலைமை நீதிபதி அனுமதி பெற வேண்டும். எனவே லஞ்ச ஒழிப்பு பொலிசார் டேப் ஆதாரங்களை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஒரு நீதிபதியை மட்டும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.
இத்தனைக்கும் லஞ்ச ஒழிப்பு பொலிசார் ஆதாரத்தை கொடுத்து ஒரு வருடமாகிறது. ஆனாலும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நீதிபதிகள் லஞ்ச ஊழலில் சிக்கிய விபரங்களை வெளியே கசிய விட்டுள்ளனர்.




உண்மையான பக்தன் யார்?

பக்தர்கள் இருவர் பரந்தாமனை நினைத்து பக்தியுடன் நெஞ்சுருகி வேண்டிக் கொண்டிருந்தனர். ?
அவர்களில் யார் தங்களை முழுமையாக நம்புகிறவர்
சுவாமி? என்று பகவானிடம் கேட்டார் மகாலட்சுமி. ?
அவர்கள் இருவரின் வேண்டுதலைப் பார், உனக்கே எல்லாம் புரியும்!
என்று சொன்னார் மகாவிஷ்ணு.
முதல் பக்தன் வேண்டத் தொடங்கினான்.. ?கடவுளே.. எனக்கு வரும் வருமானத்தில் மாதத்தின் பாதிநாட்களை நான் எப்படியோ ஓட்டிவிடுகிறேன். எனவே மீதிப் பாதிநாட்களையும் நான் கஷ்டப்படாமல் ஓட்ட, நீதான் சாமி எனக்கு ஒரு வழி செய்ய வேண்டும்!?
இரண்டாவது பக்தன் தனது கோரிக்கையை வைத்தான்.. ?ஆண்டவா.. எனக்குக் கிடைப்பவை எல்லாமே உன்னருளால் கிடைப்பவைதான். பாதி நாட்களுக்கு எனக்கு படியளக்கும் நீ மீதிப் பாதிநாட்களுக்கும் படியளக்க மாட்டாயா என்ன? உனது அருள் எனக்குக் கிடைக்கும்வரை நான் காத்துக்கொண்டிருப்பேன்!

மகாலட்சுமிக்கு இப்போது புரிந்தது. கடவுளின் கருணையாலேயே எல்லாமும் நடப்பதாக நம்புபவன் எவனோ அவனே உண்மையான பக்தன். எனவே இரண்டாம் பக்தனே சிறந்த பக்தன் என்று தெரிந்து கொண்டார்.

யாரோ

Friday, June 5, 2009

எனது காவியம்







நம் புதிய வாழ்கையை ஆரம்பிக்க உன்
மண்ணுக்கு புறப்படும் முன்
இறுதி ஊர்வலத்துக்கு தயாராகிவிட்ட
என் இனியவளுக்கு.


என்னை விட காலன் உன்மேல் அதிக
காதல் வைத்துவிட்டான்போலும்
அதனால்தான் அவசரமாய்
அணைத்துக்கொண்டான்.


உன் சுக துக்கங்களில் பங்கேடுத்துக்கொல்லத்தான்
உன்னை காதலித்தேன் இன்று
துக்கத்தை மட்டும் முழுமையாக எனக்கு
தந்துவிட்டு போய்விட்டாயே.


ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு பறந்து
வந்தேன் கனவுகளே இல்லாத
உலகுக்கு நீ
செல்லப்போகிறாய் என்று அரியாமல்.


என்னவளே நீ இன்னும் என்னுள்
வாழ்கிறாய் என்னால்
உன் இறுதிப்பயணத்தை
ஜீரணிக்க முடியாது.


நிச்சயமாய் இவ்வுலகில் நீ மீண்டும் பிறக்கமாட்டாய்
இதயத்தில் ஈரமில்லாத
மனித ஜடங்களோடு உன்னால் ஜீவிக்க
முடியாது என்று எனக்கு தெரியும் .


இதோ கடந்து போன எம்
பசுமையான நினைவுகளோடு
வாழப்போகிறேன் நம் காதலையும்
காவியமாய் காலம் சொல்ல.

உன் விழிகள்


அன்பே என் கண்கள்

கண்ணாடி அணிந்தது

கூட உன் கருவிழிகளை

கவசம் இன்றி சந்திக்க

முடியாததால்தான்.

கடவுள் என்பது யார் ?

கடவுள் என்பது யார் ?ஒரு உணர்வா ? உருவமா ? ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையா ? மனிதனை உருவாக்கியதா ? அல்லது மனிதனின் வளர்ச்சிக்கு அவனால் உருவாக்கப்பட்டதா ? என பல வினாக்களை என்னுள் எழுப்பினேன்.விடை கிடைத்தது. அதை கடைசியில் பார்ப்போம்.யாரோ சொன்னார்கள் என்பதற்காக கடவுளை நம்புவதா? அல்லது அவர்களே சொன்னார்கள் என்பதற்காக கடவுள் இல்லை என்பதா? நம்முள் பலரின் நிலைமையும் இதுதான். நம்பெற்றோரின் வழி, பிள்ளைகளுக்கு கடவுள் நம்பிக்கை கட்டாயப்படுத்தப் படுகிறது. திணிக்கப் படுகிறது. நெற்றியில் குங்குமம் வைப்பது பெண்களுக்கு கலாச்சாரம். ஆண்களுக்கோ அது அடையாளம். ஆம் கடவுள் நம்பிக்கையை பிரதிபளிக்கும் அடையாளம். அதையே குறுக்காக இடுவதும், செங்குத்தாக இடுவதும் அவரவர் உட்பிரிவுகளின் உச்சகட்ட பிரிதிபளிப்பு. விஞ்ஞான ரீதியில் சந்தனம் போன்றப் பொருட்கள் நெற்றியில் வைப்பது குளிர்ச்சி என்பதை மறுப்பதற்கு இல்லை,எனினும் சமூகத்தில் அவை ஒரு தனிப்பட்ட விஷயத்தை பிரிதிபளிக்கவே பயன்படுத்தபடுகிறது. நம் கலாச்சாரம், மதங்களுக்கும் கடவுள்களுக்கும் அப்பாற்பட்டது.ஆனால் இவ்விரண்டையும் கலாச்சார்த்தின் மீது ஏற்றுவது எவ்வகையில் நியாயம். மனிதனை நெறிபடுத்தவே மதங்களும் கடவு(ள்க)ளும்,ஆனால் இங்கு நடப்பது.......!. கடவுளை நம்புவது,படைத்தவன் மேல் பிறந்த பிரியத்தினால் அல்ல,உங்கள் வாழ்க்கையைப் பற்றிய பயத்தினால் என்றார் சத்குரு ஜக்கி வாசுதேவ். ஆம் நாம் ஒருவகையான அச்சத்தினாலே கடவுளை ஏற்கிறோம். அதுவும் அவரிடம் வியாபரமே செய்கிறோம். கடவுளின் பெயரில் அரங்கேற்றப்படும் மூடநம்பிக்கைக்கும், பணவிரயங்களுக்கும் வானமே எல்லை. "பிள்ளை அழுதது பாலுக்காக, அவளும் ஓடிவந்து பாலை ஊட்டினாள்பிள்ளைக்கு அல்ல பிள்ளையாருக்கு." குடிக்க பால் கிடைக்காத ஏழ்மை நிலையில் உள்ள நம் சமூகம், அபிஷேகம்/வேண்டிதல் என்ற பெயரில் அதை வீணடிக்க மண்டியிட்டு கூட்ட நெரிசலில் காத்திருக்கும். யாருடைய நம்பிக்கையையும் சீண்டிப்பார்ப்பது என் எண்ணமல்ல. அந்த நம்பிக்கையால் விரயமாகும் பொருள், இல்லாரை சென்றடைய வேண்டும் என்பதே நம் நோக்கம். கோவிலுக்கு செல்வதால் ஏற்படும் மன அமைதி,ஒருமித்த நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் சங்கமிப்பதால் ஏற்ப்படும், அதிர்வுகளின் வழி உண்ரப்படுகிறது. அவ்வெண்ணங்கள் கொண்ட மனிதர்கள் எங்கு சந்தித்தாலும் அதே உணர்வை ஏற்படுத்தும் அதிர்வுகளை உணரமுடியும், இது விஞ்ஞான உண்மை. வளர்ந்து வாசம் வீசும் பூக்களாய் ஆக்கப்படவேண்டிய கும்பகோணத்தின் மொட்டுக்கள் " தீ " எனும் அரக்கனால் இரையாக்கப்பட்டது, குமரி கடலில் வீற்றிருக்கும் என் அய்யன் திருவள்ளுவரின் கால்களை மட்டுமே கழுவ முடிந்த " சுனாமி " ராட்சத அலை,என் சகோதர சகோதரிகளின் உயிரை உள்வாங்கிக்கொண்டது. இது இயற்கையின் விளையாட்டு என்றால், விளையாடியது யார் கடவுளா ?கடவுள் என்ற சொல்லை நாம் துன்பத்தில் தான் அதிகம் பயன்படுத்துகிறோம், துயரம் சூழ்ந்துகொள்ளுச் சூழலில் அத்துயரத்தை கடவுள் எனும் ஊன்றுகோல் வழி அச்சூழளில் இருந்து விடுப்பெற நாம் தன்னம்பிக்கையுடன் முயற்சிக்கிறோம்,விடுபெறவும் செய்கிறோம். பின் கடவுளுக்கு நன்றி தெரிவிப்போம், உண்மையில் நம் முயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பரிசே தவிர இதில் கடவுள் எங்குள்ளார் ? ஆக கடவுள் என்ற மாயச்சொல் நமக்கு ஒரு ஊன்றுகோல் / மாயவடிவம். அவரவர் தன்னம்பிக்கையே ஊன்றுகோல் எனும் உண்மை புரிவதாயின், கடவுள் ! எனக்கு கிடைத்த விடையும் இதுதான்.அவரவர் நம்பிக்கை அவரவர்களை காப்பாற்றும், ஆனால் அந்த நம்பிக்கையே மூடநம்பிக்கையாய் ஆகும்போது !. மீண்டும் சொல்கிறேன் இந்தக் குமுறல் என் சகோதர சகோதரிகளின் மனதை பதம்பார்க்க அல்ல, பழுதுபார்க்க.
கட்டுரை - யாரோ

சிந்தனை துளிகள்

-படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
-மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
-உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.-வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான்செல்ல வேண்டும்.
-பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.
-ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
-எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
-மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
-கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
-அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம். நன்றி