Friday, June 5, 2009

கடவுள் என்பது யார் ?

கடவுள் என்பது யார் ?ஒரு உணர்வா ? உருவமா ? ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையா ? மனிதனை உருவாக்கியதா ? அல்லது மனிதனின் வளர்ச்சிக்கு அவனால் உருவாக்கப்பட்டதா ? என பல வினாக்களை என்னுள் எழுப்பினேன்.விடை கிடைத்தது. அதை கடைசியில் பார்ப்போம்.யாரோ சொன்னார்கள் என்பதற்காக கடவுளை நம்புவதா? அல்லது அவர்களே சொன்னார்கள் என்பதற்காக கடவுள் இல்லை என்பதா? நம்முள் பலரின் நிலைமையும் இதுதான். நம்பெற்றோரின் வழி, பிள்ளைகளுக்கு கடவுள் நம்பிக்கை கட்டாயப்படுத்தப் படுகிறது. திணிக்கப் படுகிறது. நெற்றியில் குங்குமம் வைப்பது பெண்களுக்கு கலாச்சாரம். ஆண்களுக்கோ அது அடையாளம். ஆம் கடவுள் நம்பிக்கையை பிரதிபளிக்கும் அடையாளம். அதையே குறுக்காக இடுவதும், செங்குத்தாக இடுவதும் அவரவர் உட்பிரிவுகளின் உச்சகட்ட பிரிதிபளிப்பு. விஞ்ஞான ரீதியில் சந்தனம் போன்றப் பொருட்கள் நெற்றியில் வைப்பது குளிர்ச்சி என்பதை மறுப்பதற்கு இல்லை,எனினும் சமூகத்தில் அவை ஒரு தனிப்பட்ட விஷயத்தை பிரிதிபளிக்கவே பயன்படுத்தபடுகிறது. நம் கலாச்சாரம், மதங்களுக்கும் கடவுள்களுக்கும் அப்பாற்பட்டது.ஆனால் இவ்விரண்டையும் கலாச்சார்த்தின் மீது ஏற்றுவது எவ்வகையில் நியாயம். மனிதனை நெறிபடுத்தவே மதங்களும் கடவு(ள்க)ளும்,ஆனால் இங்கு நடப்பது.......!. கடவுளை நம்புவது,படைத்தவன் மேல் பிறந்த பிரியத்தினால் அல்ல,உங்கள் வாழ்க்கையைப் பற்றிய பயத்தினால் என்றார் சத்குரு ஜக்கி வாசுதேவ். ஆம் நாம் ஒருவகையான அச்சத்தினாலே கடவுளை ஏற்கிறோம். அதுவும் அவரிடம் வியாபரமே செய்கிறோம். கடவுளின் பெயரில் அரங்கேற்றப்படும் மூடநம்பிக்கைக்கும், பணவிரயங்களுக்கும் வானமே எல்லை. "பிள்ளை அழுதது பாலுக்காக, அவளும் ஓடிவந்து பாலை ஊட்டினாள்பிள்ளைக்கு அல்ல பிள்ளையாருக்கு." குடிக்க பால் கிடைக்காத ஏழ்மை நிலையில் உள்ள நம் சமூகம், அபிஷேகம்/வேண்டிதல் என்ற பெயரில் அதை வீணடிக்க மண்டியிட்டு கூட்ட நெரிசலில் காத்திருக்கும். யாருடைய நம்பிக்கையையும் சீண்டிப்பார்ப்பது என் எண்ணமல்ல. அந்த நம்பிக்கையால் விரயமாகும் பொருள், இல்லாரை சென்றடைய வேண்டும் என்பதே நம் நோக்கம். கோவிலுக்கு செல்வதால் ஏற்படும் மன அமைதி,ஒருமித்த நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் சங்கமிப்பதால் ஏற்ப்படும், அதிர்வுகளின் வழி உண்ரப்படுகிறது. அவ்வெண்ணங்கள் கொண்ட மனிதர்கள் எங்கு சந்தித்தாலும் அதே உணர்வை ஏற்படுத்தும் அதிர்வுகளை உணரமுடியும், இது விஞ்ஞான உண்மை. வளர்ந்து வாசம் வீசும் பூக்களாய் ஆக்கப்படவேண்டிய கும்பகோணத்தின் மொட்டுக்கள் " தீ " எனும் அரக்கனால் இரையாக்கப்பட்டது, குமரி கடலில் வீற்றிருக்கும் என் அய்யன் திருவள்ளுவரின் கால்களை மட்டுமே கழுவ முடிந்த " சுனாமி " ராட்சத அலை,என் சகோதர சகோதரிகளின் உயிரை உள்வாங்கிக்கொண்டது. இது இயற்கையின் விளையாட்டு என்றால், விளையாடியது யார் கடவுளா ?கடவுள் என்ற சொல்லை நாம் துன்பத்தில் தான் அதிகம் பயன்படுத்துகிறோம், துயரம் சூழ்ந்துகொள்ளுச் சூழலில் அத்துயரத்தை கடவுள் எனும் ஊன்றுகோல் வழி அச்சூழளில் இருந்து விடுப்பெற நாம் தன்னம்பிக்கையுடன் முயற்சிக்கிறோம்,விடுபெறவும் செய்கிறோம். பின் கடவுளுக்கு நன்றி தெரிவிப்போம், உண்மையில் நம் முயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பரிசே தவிர இதில் கடவுள் எங்குள்ளார் ? ஆக கடவுள் என்ற மாயச்சொல் நமக்கு ஒரு ஊன்றுகோல் / மாயவடிவம். அவரவர் தன்னம்பிக்கையே ஊன்றுகோல் எனும் உண்மை புரிவதாயின், கடவுள் ! எனக்கு கிடைத்த விடையும் இதுதான்.அவரவர் நம்பிக்கை அவரவர்களை காப்பாற்றும், ஆனால் அந்த நம்பிக்கையே மூடநம்பிக்கையாய் ஆகும்போது !. மீண்டும் சொல்கிறேன் இந்தக் குமுறல் என் சகோதர சகோதரிகளின் மனதை பதம்பார்க்க அல்ல, பழுதுபார்க்க.
கட்டுரை - யாரோ

No comments:

Post a Comment