Monday, August 24, 2009
டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள்
இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது.
பிரச்சினைக் குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும்.
எந்த பைல்களை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
Friday, August 21, 2009

இல்லாத வாழ்க்கை
Saturday, August 8, 2009

Wednesday, July 22, 2009
சொந்த மகளைக் பாலியல்வல்லுறவிற்குட்படுத்தியத்திய தந்தைக்கு 15 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை:வவுனியா மேல் நீதிமன்றம்
பதினாறு வயது நிரம்பாத தனது சொந்த மகளைசுவிஸில் வியர்வையை வெளியேற்றும் புதிய ரோபோ ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

குறித்த வகை ரோபோ வெப்பத்தை வெளியேற்றி மனிதனைப் போன்று நடக்கக் கூடியதெனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆடை வகைகளை பரிசோதனை செய்வதற்காக இந்த வியர்க்கும் ரோபோ கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
செட் கெலனைச் சேர்ந்த மார்க் ரிச்சர்ட்ஸ் என்ற விஞ்ஞானியே இந்த ரோபோவை உருவாக்கியுள்ளார்.
இந்த ரோபோ தொடர்பான மேலதிக ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Monday, July 13, 2009
சரிவிலிருந்து மீளும் நிலையில் உலகின் பொருளாதாரம்
உலகில் அதிகளவு வளர்ச்சி கண்ட நாடுகளைக் கொண்ட ஜி8 அமைப்பின் தலைவர்களிடையில் இத்தாலியில் விவாதங்கள் நடந்துவரும் நிலையில், நாணய நிதியத்தின் இந்த மதிப்பீடு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நிதிச் சந்தைகளிலும் வங்கிகளிலும் இப்போதும் பிரச்சினைகள் இருந்துவரவே செய்வதாகவும், செல்வந்த நாடுகளின் பொருளாதாரங்கள் அடுத்த வருடத்தின் பிற்பகுதியில் தான் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப முடியும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.
பொருளாதார மற்றும் நிதிக் கொள்கைகளில் முன்பில்லாத வகையில் எடுக்கப்பட்ட பெரும் முயற்சிகள் உலகப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்க உதவும் ஒரு காரணியாக அமைந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.
Saturday, July 4, 2009

என்னை ஏக்கத்தோடு
Wednesday, July 1, 2009
இன்னும் ஏன் மௌனம்

கண்கள் பேசும் காதல்
Tuesday, June 30, 2009
மாப்பிள்ளை பிடிக்கவில்லை’ என்று கூறிய மணப்பெண்ணால் திருமணம் நின்றது

முகூர்த்த நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று மணமகள் கூறியதால் திருமணம் நின்றது. அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் வேறு வழியின்றி திரும்பி சென்றனர். |
| சென்னை கே.கே.நகரை சேர்ந்த எம்காம் பட்டதாரி பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மயிலாப்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை திருமண வரவேற்பு நடந்தது. மாலை 6 மணிக்கு மணமகன் மட்டும் மேடையில் இருந்தார். மணமகள், அலங்காரத்துக்கு சென்றவர் இரவு 7 மணிக்குதான் திரும்பியுள்ளார். பின்னர் மேடைக்கு வரும்போது திடீரென்று மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் மணமகள் அறைக்கு அவரை அழைத்து சென்றனர். மணமகன் மட்டும் மேடையில் அமர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் இரவு 11 மணிக்கு, "எனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை" என்று மணமகள் கூறியுள்ளார். இதனால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர்களும் நண்பர்களும் மணமகளிடம் அதிகாலை 4 மணி வரை பேசி பார்த்தனர். ஆனால், திருமணத்துக்கு கடைசி வரை அவர் சம்மதிக்கவே இல்லை. அவருக்கு ஆதரவாக அம்மாவும் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த மணமகன் வீட்டார், அதிகாலை 4 மணிக்கு திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர். மண்டபத்தில் அலங்கார வேலைப்பாடுகள், சாப்பாடு எல்லாம் தயாராக இருந்தன. தோரணங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. மேடையில் மணமகளின் பெயரை மட்டும் கிழித்துவிட்டு "தவிர்க்க முடியாத காரணத்தால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது" என்று எழுதி வைத்து விட்டு மணமகன் வீட்டார் சென்றனர். மணமேடை வரை வந்து, மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சாதாரண ஒரு காரணத்தை சொல்லி திருமணத்தை நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று மணமகன் வீட்டார் வேதனையுடன் கூறிவிட்டு சென்றனர். அவர்கள் போலீசில்கூட புகார் தெரிவிக்கவில்லை. |
Tuesday, June 23, 2009
ஒரு தாயிடமிருந்து

தாயென்ற அந்தஸ்து தந்த
சோதனைகளை உன்
Monday, June 22, 2009
யாருக்காக..?

இதோ என் இதயம் கிழிந்து
ஒவ்வொரு இரவும்
Thursday, June 18, 2009
நிலவு அழுகிறது தன்னை
விட உன்னை அழகாக படைத்து
பிரம்மன் தனக்கு வஞ்சனை
செய்துவிட்டான் என்று
*
நீ
இருவர் சேர்ந்து
இரவில் எழுதிய
கறுப்புக்கவிதை!
*
Wednesday, June 17, 2009
பல நூற்றாண்டு காலம் மறைந்திருந்த அரிய அரை நிர்வாண மோனாலிஸா ஓவியம் - இத்தாலியில் கண்டுபிடிப்பு

உலகப் பிரபல ஓவியர் லியனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மேலாடையற்ற மோனாலிஸா ஓவியமானது பல நூறு வருடங்களுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை எவரது பார்வையிலும் சிக்காது மறைவாக இருந்த இந்த அரிய ஓவியம், இத்தாலியிலுள்ள லியனார்டோ டாவின்சியின் பிறப்பிடமான வின்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வழமையான மோனாலிஸாவின் ஓவியத்தையொத்த புன்னகை மற்றும் பின்னணிக் காட்சிகளுடன் காணப்படும் இந்த ஓவியம், நெப்போலியனின் மாமனார் கருதினால் ஜோசப் பெஸ்ச்சின் உடைமையாக இருந்து அவரது வாசிகசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
1503 ஆம் ஆண்டு லியனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மேற்படி ஓவியம், அசல் மோனாலிஸா ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட 6 நிர்வாண மோனாலிஸா ஓவியங்களில் ஒன்றென வின்சி அருங் காட்சியகத்தின் தலைவர் அலெக்ஸாண்ட்ரோ வெஸ்ஸோய் தெரிவித்தார்.
1479 ஆம் ஆண்டு பிறந்த லிஸா டெல் கியோகொன்டோ என்ற பெண்மணியின் உருவப்படமே இந்த மோனாலிஸா ஓவியம் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tuesday, June 16, 2009
Friday, June 12, 2009
இந்தியக்கொடியை எரிக்க முயன்றவர்களுக்கு நாள்தோறும் வீட்டின் முன்பு கொடியேற்றுமாறு தண்டனை
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தி இந்தியக்கொடியை எரிக்கமுயன்றவர்கள் நாள்தோறும் தங்கள் வீட்டின் முன்பு கொடியேற்ற வேண்டுமென்று நீதிபதி தண்டனையளித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தி தமிழர் தேசிய பொதுவுடைமை கட்சி, தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்தியா மற்றும் இலங்கையின் தேசிய கொடிகளை தீ வைத்து எரிக்க முயன்றனர். இது தொடர்பாக தமிழரசன் உள்பட 8 பேரை கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். எனவே, தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி இவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்து இருந்தனர். இந்த மனு விடுமுறை கால நீதிபதி கர்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போது, தேசிய கொடியை மதிக்கிறேன். அக்கொடியை பெரிதும் நேசிக்கிறேன் என கடிதம் எழுதி தரும்படி அவர்களிடம் நீதிபதி கேட்டார். ஆனால் அவர்கள் தர வில்லை. இந்த நிலையில் இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர், கொடியை எரிக்க முயன்றவர்கள் ஒரு மாதத்துக்கு தினமும் தங்கள் வீட்டின் முன்பு தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தர விட்டார்.
எப்போதோ படித்தது
டேய் மறந்துடாதே... பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை 'ரிஸீவ்' பண்ணவர்ற ஆள்கிட்ட 'அடையாளம்' சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.அதனால வழக்கம் போல் தண்ணியை போட்டுட்டு'கிழே படுத்துக்க' ஆமா!!!
ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க பஸ்ல காசுக் கொடுக்கலன்னா பஸ் ஓட்டச்சொல்வாங்களா?
காதல் ஒரு மழை மாதிரி,நனையும் போது சந்தோஷம். நனைந்த பின்பு ஜலதோஷம்.
வாழை மரம் 'தார்' போடும் ஆனால் அதை வச்சு நம்மால'ரோடு' போட முடியாதே!
என்னதான் கராத்தேல பிளாக்பெல்ட்டுனாலும்தெருநாய் தொரத்தினா ஓடத்தான் செய்யணும்.
மரனம் என்பது ஒரு நொடியில் உயிர் போகும்ஆனால் பிரிவு என்பது ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்.
