Wednesday, July 22, 2009

சொந்த மகளைக் பாலியல்வல்லுறவிற்குட்படுத்தியத்திய தந்தைக்கு 15 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை:வவுனியா மேல் நீதிமன்றம்

பதினாறு வயது நிரம்பாத தனது சொந்த மகளை
பாலியல்வல்லுறவிற்குட்படுத்தியத்திய குற்றத்திற்காக தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 15 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.


ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினராக இருந்த இவருக்கு நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்துள்ளது.வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் முன்னிலையில் சட்டமா அதிபரினால் பதினாறு வயதுக்குக் குறைந்த தனது மகள் மீதான பாலியல்வல்லுறவு தொடர்பில் 3 குற்றங்கள் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


வழக்கு விசாரணையின்போது சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி தனது கணவன் சொந்த மகளைக் பாலியல் வல்லுறவு கொண்டதை நேரில் கண்டு பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து இந்த கற்பழிப்பு வழக்கு எதிரியாகிய செல்வராஜா சற்குணலிங்கத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டது. தனது தந்தை தன்னை பல தடவைகள் தன்மீது பாலியல் குற்றம் புரிந்ததாகத் தெரிவித்தார். எதிரி மீது சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளும் பாலியல்வல்லுறவு தொடர்பானதாகும்.


குற்றச் சம்பவம் நடைபெற்றதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வவுனியா வைத்திய அதிகாரி டாக்டர் பாலச்சந்திரன், பாதிக்கப்பட்ட சிறுமியின் பிறப்புறுப்பின் உட்பகுதியில் உராய்தல் காயம் ஏற்பட்டிருந்ததாகவும் பலவந்தமாக அவர் மீது பாலியல் குற்றம் புரியப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் தமது வைத்திய அறிக்கையில் தெரிவித்திருந்தார்.


விசாரணைகளின் முடிவில் எதிரியைக் குற்றவாளியாகக் கண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் எதிரிக்கு 15 வருடங்கள் கரூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் தண்டமாக அவர் 10 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டு என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
இவனுங்க எப்பதான் திருந்த போறானுங்களோ.

சுவிஸில் வியர்வையை வெளியேற்றும் புதிய ரோபோ ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது


சுவிட்சர்லாந்தில் வியர்வையை வெளியேற்றக் கூடிய புதிய வகை ரோபோ ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வகை ரோபோ வெப்பத்தை வெளியேற்றி மனிதனைப் போன்று நடக்கக் கூடியதெனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆடை வகைகளை பரிசோதனை செய்வதற்காக இந்த வியர்க்கும் ரோபோ கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

செட் கெலனைச் சேர்ந்த மார்க் ரிச்சர்ட்ஸ் என்ற விஞ்ஞானியே இந்த ரோபோவை உருவாக்கியுள்ளார்.

இந்த ரோபோ தொடர்பான மேலதிக ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.