Monday, February 1, 2010

இறந்த முதியவர் சவப்பெட்டியில் இருந்து மீண்டும் எழுந்தார்



போலந்து நாட்டில் உள்ள கடாவைஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜோசப் கூசி (வயது 76) தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.


உடனே அவருடைய மனைவி லுட்மியா ஆம்புலன்சை வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறினார்.


பின்னர் ஜோசப் கூசி உடலில் வெள்ளை துணியை சுற்றி மனைவியிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர். உடலை வீட்டுக்கு கொண்ட வந்ததம் சவப்பெட்டிக்குள் வைத்து இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.


அப்போது சவப்பெட்டிக்குள் இருந்து முனகல் சத்தம் வந்தது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று தெரியாமல் அங்கு இருந்தவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர். அடுத்த வினாடியில் சவப்பெட்டியை தட்டும் சத்தம் கேட்டது.


அதிர்ச்சி அடைந்த அவர்கள் சவப்பெட்டியை திறந்து பார்த்தனர். ஜோசப் கூசி உயிருடன் எழுந்தார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் திகைத்த அவரிடம் நடந்த விஷயங்களை கூறினார்கள்.


பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். சில மணி நேரத்துக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.


இதுபற்றி கூறிய ஜோசப் கூசி, நான் உயிர் பிழைத்தது ஒரு பானை தேனை சேகரித்து மகிழ்ச்சியுடன் திரும்பியது போல இருக்கிறது என்று வேடிக்கையாக கூறினார்.