Thursday, December 5, 2013

திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்.....

ஒரு பெண்மணி நடுஇரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார். வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார். அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர் ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார். மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?
மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்) அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? ஆமாம்(கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்).
கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?.
மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது அதற்கென்ன? கணவன் கண்களைத் துடைத்தவாறு, அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள் என்று கூறினார். இதற்குப் பின்பு கேட்கவா வேணும் விழுந்தை அடியை.....

Wednesday, December 4, 2013

நள்ளிரவில் கதவைத் தட்டிய கப்பல் கப்டன் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கப்பலில் வந்த கப்பலின் உப கப்டன் நள்ளிரவு வேளையில் ஏழாலை சூராவத்தை பகுதியில் உள்ள வீடொன்றினுள் உட்பிரவேசிக்க முற்பட்ட வேளை அச்சமடைந்த மக்கள் மடக்கிப் பிடித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
 
கப்பல் நங்கூரமிடப்பட்ட பின்னர் குறிப்பிட்ட உதவிக் கப்டன் இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் அலுவலகத்தில் கடமையாற்றும் தனது நண்பனான பொறியியலாளரைச் சந்திக்கச் சென்றுள்ளார்.
 
அதனைத் தொடர்ந்து இருவரும் மது அருந்திவிட்டு நண்பரின் இருப்பிடத்துக்கு சென்றுள்ளனர். நள்ளிரவு வேளையில் குறிப்பிட்ட உதவிக் கப்டன் வெளியேறி ஏழாலை சூராவத்தைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் உட்பிரவேசிக்க முயன்று கதவைத் தட்டியதுடன் சிங்கள மொழியில் பேசியும் உள்ளனர்.
 
இந்நிலையில் திருடன் என நினைத்த பொதுமக்கள் பிடிக்க முற்பட்டவேளை குறித்த நபர் தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தபோது பொதுமக்கள் அந் நபரை விரட்டிப் பிடித்து சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
 
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் யார் என இனங்காணப்பட்டுள்ளதுடன் நண்பரான இலங்கை மின்சார சபையில் கடமையாற்றும் பொறியியலாளரை அழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மை நிலை உறுதிசெய்யப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Tuesday, December 3, 2013

தங்க நகைகளை கடத்தி செல்ல முற்பட்ட பெண் கைது

இந்தியாவிற்கு சட்டவிரோதமாக தங்க நகைகளை கடத்தி செல்ல முற்பட்ட பெண்ணொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிசார் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கைது செய்துள்ளனர்.


57 வயதுடைய குறித்த பெண் அவருடைய இடுப்பு பட்டியில் 350 கிராம் தங்கத்தை கடத்த முற்பட்டதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர.  
தங்க நகையின் பெறுமதி 7இலட்சத்து 7 ஆயிரம் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.