ஐம்பதை நெருங்கிய
எங்கள் வீட்டு ஆலமரம்
என் அப்பா...
காற்றுக்கு வளையாத
இரும்பு போல
கஷ்டத்திலும் கலங்காத
நெஞ்சம் .......
பதின்மூன்று வயது
முதல் எங்களுக்காய்
பகல் இரவாய்
உருகிய மெழுகுவரத்தி
பாலூட்டி வளர்த்த
என் அன்னை போல
பாசத்தையும் பண்பையும்
வளர்த்த என் அப்பா
துஷ்டனை கண்டால் தூர விலகு
எனும் போதும் நம் தூய அன்பால்
அவனையும் மனிதனாக்கலாம்
என்று சொல்லித்தந்தவர்
உதிரத்தை உழைப்பாக்கி
எங்களை உயரத்துக்கு
கொண்டு வந்த உத்தமரே
உன் பாதத்தில்
என் கண்ணீரை
மட்டும் கொட்டினால்
போதாது........
என் இறுதி மூச்சிருக்கும்
வரை என்னை
எரித்து உனக்கு
வெளிச்சம் தருவேன்.
No comments:
Post a Comment