உலகப் பிரபல ஓவியர் லியனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மேலாடையற்ற மோனாலிஸா ஓவியமானது பல நூறு வருடங்களுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை எவரது பார்வையிலும் சிக்காது மறைவாக இருந்த இந்த அரிய ஓவியம், இத்தாலியிலுள்ள லியனார்டோ டாவின்சியின் பிறப்பிடமான வின்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வழமையான மோனாலிஸாவின் ஓவியத்தையொத்த புன்னகை மற்றும் பின்னணிக் காட்சிகளுடன் காணப்படும் இந்த ஓவியம், நெப்போலியனின் மாமனார் கருதினால் ஜோசப் பெஸ்ச்சின் உடைமையாக இருந்து அவரது வாசிகசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
1503 ஆம் ஆண்டு லியனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மேற்படி ஓவியம், அசல் மோனாலிஸா ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட 6 நிர்வாண மோனாலிஸா ஓவியங்களில் ஒன்றென வின்சி அருங் காட்சியகத்தின் தலைவர் அலெக்ஸாண்ட்ரோ வெஸ்ஸோய் தெரிவித்தார்.
1479 ஆம் ஆண்டு பிறந்த லிஸா டெல் கியோகொன்டோ என்ற பெண்மணியின் உருவப்படமே இந்த மோனாலிஸா ஓவியம் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment