Thursday, August 12, 2010


நேரம் இரவு ஒன்பது
மணி இடம் எனது
வீட்டு மொட்டை மாடி
வீட்டில் யாருமேயல்லாத
தைரியத்தில் ஒரு
சிகரட்டை
பற்றவைத்துக்கொண்டு
எதோ யோசனையில்
ஆழ்ந்திருக்கிறேன்

எதேட்சையாய் எதிவீட்டு
ஜன்னலுக்கு என்பார்வை
தாவ என்தேவதை முகம்
சிவந்துபோய் கோபமாய்
ஒரு பார்வை பார்த்துவிட்டு
விருட்டென்று போய்விட்டால்.

ஆகா இப்போதுதான்
புரிகிறது இவ்வளவு
நாளாய் எனக்குதெரியாமலே
அவளும் என்னை
காதலித்திருக்கிறாள்
இதோ இன்றோடு ஒரு
முடிவெடுத்துவிட்டேன்
இனி சிகரட்
பிடிப்பதில்லை என்
வீட்டு மொட்டைமாடியில்.

Thursday, June 17, 2010

மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள்

வாழ்க்கையில் பிரிக்கமுடியாத ஓர் அம்சம்தான் மனஅழுத்தம். மனஅழுத் தத்தை வெற்றிகரமாகச் சந்திப்பது எப்படி என்ற ரகசியத்தைத் தெரிந்து வைத் திருப்பவர்களே நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். மனஅழுத்தத் தைக் குறைக்க சில எளிய வழிகள் இருக்கின்றன. அவை உளவியல் ரீதியானவை. காலம்காலமாக நிரூபிக்கப் பட்டு வந்திருக்கும் உண்மைகள். எதிர் காலத்தை நம்பிக்கையுடன் வரவேற்கும் எண்ணங் களை வளர்த்துக் கொள்வது, விரக்தியை அண்டவிடாமல் தடுப்பது, பகுத்தறிவுக் குப் பொருந்திவரும் சில யுக்திகளைக் கடைப்பிடித்து மனதை உற் சாக நிலை யில் வைத்திருப்பது போன்ற வழிகளே அவை.எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பயிற்சியளித்து நம் மீது முழுக்கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் மனஅழுத்த மேலாண்மையின் நோக்கம். நேர்மறையான மனப்பாங்கு, விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகிய மூன்றும் மன அழுத்தத்தை வெற்றிகொள்வதற் கான முன்தேவைகள். அது மட்டுமின்றி ஒரு சமூக ஆதரவு தளம், பொருத்தமான நடை முறைகளைப் பயன்படுத்தி உடலையும் மனதையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளல், உடற்பயிற்சி, சரிவிகித உணவு, உறக்கம், நகைச்சுவையுணர்வு, பொழுது போக்கு விளையாட்டுகள் ஆகிய அனைத் துமே மனஅழுத்தத்திலிருந்து நம்மை விடுவிக்கும் மாமருந்துகள்தாம்.

Monday, February 1, 2010

இறந்த முதியவர் சவப்பெட்டியில் இருந்து மீண்டும் எழுந்தார்



போலந்து நாட்டில் உள்ள கடாவைஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜோசப் கூசி (வயது 76) தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.


உடனே அவருடைய மனைவி லுட்மியா ஆம்புலன்சை வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறினார்.


பின்னர் ஜோசப் கூசி உடலில் வெள்ளை துணியை சுற்றி மனைவியிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர். உடலை வீட்டுக்கு கொண்ட வந்ததம் சவப்பெட்டிக்குள் வைத்து இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.


அப்போது சவப்பெட்டிக்குள் இருந்து முனகல் சத்தம் வந்தது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று தெரியாமல் அங்கு இருந்தவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர். அடுத்த வினாடியில் சவப்பெட்டியை தட்டும் சத்தம் கேட்டது.


அதிர்ச்சி அடைந்த அவர்கள் சவப்பெட்டியை திறந்து பார்த்தனர். ஜோசப் கூசி உயிருடன் எழுந்தார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் திகைத்த அவரிடம் நடந்த விஷயங்களை கூறினார்கள்.


பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். சில மணி நேரத்துக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.


இதுபற்றி கூறிய ஜோசப் கூசி, நான் உயிர் பிழைத்தது ஒரு பானை தேனை சேகரித்து மகிழ்ச்சியுடன் திரும்பியது போல இருக்கிறது என்று வேடிக்கையாக கூறினார்.



Saturday, January 2, 2010




அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.