மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள்
வாழ்க்கையில் பிரிக்கமுடியாத ஓர் அம்சம்தான் மனஅழுத்தம். மனஅழுத் தத்தை வெற்றிகரமாகச் சந்திப்பது எப்படி என்ற ரகசியத்தைத் தெரிந்து வைத் திருப்பவர்களே நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். மனஅழுத்தத் தைக் குறைக்க சில எளிய வழிகள் இருக்கின்றன. அவை உளவியல் ரீதியானவை. காலம்காலமாக நிரூபிக்கப் பட்டு வந்திருக்கும் உண்மைகள். எதிர் காலத்தை நம்பிக்கையுடன் வரவேற்கும் எண்ணங் களை வளர்த்துக் கொள்வது, விரக்தியை அண்டவிடாமல் தடுப்பது, பகுத்தறிவுக் குப் பொருந்திவரும் சில யுக்திகளைக் கடைப்பிடித்து மனதை உற் சாக நிலை யில் வைத்திருப்பது போன்ற வழிகளே அவை.எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பயிற்சியளித்து நம் மீது முழுக்கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் மனஅழுத்த மேலாண்மையின் நோக்கம். நேர்மறையான மனப்பாங்கு, விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகிய மூன்றும் மன அழுத்தத்தை வெற்றிகொள்வதற் கான முன்தேவைகள். அது மட்டுமின்றி ஒரு சமூக ஆதரவு தளம், பொருத்தமான நடை முறைகளைப் பயன்படுத்தி உடலையும் மனதையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளல், உடற்பயிற்சி, சரிவிகித உணவு, உறக்கம், நகைச்சுவையுணர்வு, பொழுது போக்கு விளையாட்டுகள் ஆகிய அனைத் துமே மனஅழுத்தத்திலிருந்து நம்மை விடுவிக்கும் மாமருந்துகள்தாம்.
No comments:
Post a Comment