பஞ்சாப் லஞ்ச ஒழிப்பு பொலிசார், நீதிபதிகள் யாராவது லஞ்சம் வாங்குகிறார்களா? என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நீதிபதிகள் யார் யாருடன் டெலிபோனில் பேசுகின்றனர் என்பதை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது பஞ்சாப் ஐகோர்ட்டில் நீதிபதிகள் இருவர் இடைத்தரகர்கள் மூலம் குற்றவாளிகளிடம் பேசி லஞ்சம் கேட்டது தெரியவந்தது.
கற்பழிப்பு வழக்கு
பஞ்சாப்பில் ஒரு பெண்ணை கற்பழித்ததாக ராம்லால் என்பவரும் ஐ எ எஸ் அதிகாரி ஜெயின் என்பவரு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நீதிபதி மேக்தாப்சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் தனது உறவினர் ஒருவர் மூலம் குற்றவாளிகளிடம் பேசினார். அவர்களை விடுவிக்க ரூ . 40 லட்சம் லஞ்சம் கேட்டார்.
அவர்கள் டெலிபோனில் பேசியதை லஞ்ச ஒழிப்பு பொலிசார் பதிவு செய்தனர். இதேபோல மேலும் சில நீதிபதிகளும் லஞ்சம் பேசிய ஆதாரங்கள் கிடைத்தன.
நடவடிக்கை இல்லை
நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் தலைமை நீதிபதி அனுமதி பெற வேண்டும். எனவே லஞ்ச ஒழிப்பு பொலிசார் டேப் ஆதாரங்களை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஒரு நீதிபதியை மட்டும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.
இத்தனைக்கும் லஞ்ச ஒழிப்பு பொலிசார் ஆதாரத்தை கொடுத்து ஒரு வருடமாகிறது. ஆனாலும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நீதிபதிகள் லஞ்ச ஊழலில் சிக்கிய விபரங்களை வெளியே கசிய விட்டுள்ளனர்.
1 comment:
நாம எல்லாம் எப்பத்தான் திருந்தப் போகிறோம்?
Post a Comment